பொகவந்தலாவை பகுதியில் வீடொன்றின் மீது இடிந்து விழுந்த பெரிய பாதுகாப்பு சுவர்
பொகவந்தலாவை - ஆரியபுரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (19) பிற்பகல் பெய்த கனமழையின் போது, வீடொன்றின் மீது பெரிய பாதுகாப்பு சுவர் இடிந்து விழுந்துள்ளது.
கடுமையான மழை
தீபாவளி பண்டிகைக்காக நேற்று வீட்டில் வசிப்பவர்கள், கொழும்பில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்த வேளையில் இரவு 8 மணியளவில் நீடித்த மழையின்போது வீட்டின் பின்னால் கட்டப்பட்ட பாதுகாப்புச் சுவர் இடிந்து அவ்வீட்டின் மீது விழுந்ததாக அயலவர்கள் தெரிவித்தனர்.

பாதுகாப்புச் சுவர் இடிந்து விழுந்ததால், குறித்த வீட்டின் இரண்டு அறைகள் மற்றும் சமையலறை பலத்த சேதமடைந்துள்ளன. பக்கவாட்டுச் சுவர் இடிந்து விழுந்ததால், வீட்டில் வசிப்பவர்களின் தனிப்பட்ட உடைமைகளும் கடுமையாக சேதமடைந்துள்ளன.
இதற்கிடையில், நோர்வூட் பகுதியில் பெய்த கனமழையால் வடிகாலமைப்புகள் அடைபட்டதால், மழைநீர் நோர்வூட் நகரத்துக்குள் பாய்ந்ததில், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam