மட்டக்களப்பில் பலத்த மழை! கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் 47.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கடற்றொழிலில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்றையதினம்(2.8.2026) பிற்பகல் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக கடல் சார் தொழிலாளர்கள் கடற்றொழிலுக்கு தொழிலுக்கு செல்லாத காரணத்தினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
வாழ்வாதாரம் பாதிப்பு
இதேவேளை மட்டக்களப்பு மாவட்ட கரையோர பகுதிகளிலும் கடற்றொழிலாளர்கள் தங்களது மீன்பிடி படகுகளை பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தி வைத்துள்ளதுடன் கடற்கரையில் கடலின் நிலைமையைப் பற்றி அவதானித்த வண்ணம் உள்ளனர்.

எனினும் திங்கட்கிழமை காலை தொடக்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் வானிலை மப்பும், மந்தாரமுமாகவுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.