அடுத்து 36 மணித்தியாலங்களுக்கு நாட்டில் கனமழை - பொதுமக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
அடுத்து 36 மணித்தியாலங்களுக்கு நாட்டில் பல பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு இன்று(03.08.2026) 3 மணியளவில் வெளியாகியுள்ளது.
இதற்கமைய, மத்திய, சப்ரகமுவா, தென் மற்றும் மேல் மாகாணங்களுக்கு இன்று மாலை, இரவு என மழை தொடர்ச்சியாக கிடைக்கும் வாய்ப்புள்ளது.
அத்துடன், நாட்டில் உள்ள பல ஆறுகள் வெள்ள மட்டத்தை அடைந்துள்ள நிலையில், மகாவலி, களுகங்கை, களனி கங்கை போன்றன பல இடங்களில் பெருக்கெடுத்துள்ளன.
பொதுமக்கள் கவனத்திற்கு..
இதனால் ஆற்றங்கரையோரங்கள், நீர்த்தேக்கங்களின் மேலதிக நீர் வெளியேறும் பகுதிகள், மற்றும் தாழ்நிலப்பகுதி மக்கள் உடனடியாக அந்த இடங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, நுவரெலியா, கண்டி, கேகாலை, மாத்தளை மற்றும் குருநாகல் மாவட்டத்தின் சில பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று இரவு வரை காத்திருக்காமல் பகல் பொழுதே பாதுகாப்பான இடங்களுக்கு செல்வது சிறந்தது என்றும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.