ஜப்பானில் பெய்து வரும் கன மழை: வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கை
ஜப்பானில் பிராந்தியத்தின் சில நகரங்களில் கடந்த இரண்டு நாட்களாக வரலாறு காணாத மழை பெய்ததை அடுத்து, மண்சரிவு மற்றும் வெள்ளத்தால் ஏற்படும் அபாயங்கள் குறித்து ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வெப்பமண்டல புயலானது இன்று(12) ஜப்பானின் வடக்குப் பகுதியான இவாட்டில் நிலச்சரிவை ஏற்படுத்தியது.
பலத்த மழையால் விமானங்கள் மற்றும் தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள அதே நேரத்தில் சில பகுதிகளில் உள்ள மக்களை வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
விமான சேவைகள் ரத்து
இந்நிலையில், அதிகபட்ச காற்றின் வேகம் மணிக்கு 72 கிமீ (45 மைல்) வேகத்தில் ஜப்பான் கடலை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், நிலைமையைச் சமாளிக்க அரசாங்கம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என்று பிரதமர் ஃபுமியோ கிஷிடா கூறியுள்ளார்.

ஜப்பான் விடுமுறையைக் கடைப்பிடித்தாலும், இவாட் மற்றும் பிற வடக்குப் பகுதிகளில் சில அதிவேக தொடருந்துகள் மற்றும் வழக்கமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, ஜப்பான் ஏர்லைன்ஸ் மற்றும் ஆல் நிப்பான் ஏர்வேஸ் ஆகியவை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான விமானங்களை ரத்து செய்துள்ளன.

மேலும், இதுவரை உயிர் சேதம் குறித்து எந்தவொரு தகவலும் வெளியாகமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    சீனாவில் இருந்து அரிய பூமி கனிமங்களை இறக்குமதி செய்ய உரிமம் பெற்றுள்ள இந்திய நிறுவனங்கள் News Lankasri
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        