சுவிட்சர்லாந்தில் கருணை கொலை செய்யப்பட்ட இலங்கை யானை
சுவிட்சர்லாந்தின்(Switzerland) சூரிச் மிருகக்காட்சிசாலையில இலங்கை யானையொன்று கருணை கொலை செய்யப்பட்டுள்ளது.
இலங்கையிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட செய்லா ஹிமாலி என்ற யானையே இவ்வாறு கருணை கொலை செய்யப்பட்டுள்ளது.
சொந்தக் காலில் எழுந்து நிற்க முடியாத அளவிற்கு இந்த யானை நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் அதிகாரிகள் கருணை கொலை செய்யத் தீர்மானித்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நீண்ட கால நோய்வாய்
இலங்கை யானைகள் சரணாலயம் ஒன்றிலிருந்து சுவிட்சர்லாந்திற்கு கொண்டு சென்ற யானை 49ஆம் வயதில் கருணை கொலை செய்யப்பட்டுள்ளது.
இந்த யானை நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்த காரணத்தினால் யானையை கருணை கொலை செய்துள்ளனர்.
1976ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த யானை இலங்கைியிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த யானை ஆறு குட்டிகளை ஈன்றுள்ளதுடன் வேறும் யானைகளை வளர்ப்பதற்கு உதவியுள்ளதாக மிருகக்காட்சிசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஹிமாலி உயிரிழந்த நிலையில் சூரிச் மிருகக் காட்சிசாலையில் 35 வயதான பானாங் என்ற யானையும், 19 வயதான பாரா என்ற யானையும் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 44 நிமிடங்கள் முன்

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan
