திருகோணமலையில் கடும் மழை(Photos)
திருகோணமலையில் கடும் மழை பெய்து வருவதன் காரணமாக பொதுமக்களின் அன்றாட செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை - கந்தளாய் பிரதேசத்திலே நீண்ட காலத்திற்கு பின்னர் கடும் மழை பெய்து வருவதாக கூறப்படுகின்றது.
கடும் மழை
அத்துடன், தொடர்ச்சியாக இன்று(28) காலை முதலே மழை பெய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுபோக வேளாண்மை செய்கைகள் மேற்கொள்ளப்பட்டு ஒரு மாதம் கடந்த நிலையில் இவ்வாறு மழை பெய்வதால் தமது பயிர்கள் சேதமடைந்து விடுமா என்று விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
அதிகரித்துள்ள நீர் மட்டம்
கந்தளாய் பிரதேசத்தில் சிறு வீதிகள் மழை நீரில் மூழ்கியுள்ளதோடு, காண்களிலும் நீர் வடிந்து ஓடுகின்றது.
மேலும், கந்தளாய் குளத்தின் நீர் மட்டம் சற்று கூடியுள்ளதோடு வான் எல, சீனி ஆலை போன்ற சிறிய குளங்களின் நீர் மட்டமும் கூடியுள்ளது.
போதைப்பொருளை ஊசி மூலம் எடுத்து கொண்ட இளைஞர் உயிரிழப்பு |