நுவரெலியா செல்லும் சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நுவரெலியாவில் (Nuwara Eliya) இன்று காலை முதல் அதிக பனிமூட்டமான காலநிலை நிலவி வருவதால் வாகனங்களை மிக அவதானமாக செலுத்துமாறு சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சீரற்ற வானிலையினை தொடர்ந்து நுவரெலியாவில் மழையுடனான காலநிலை தொடர்ந்து வரும் நிலையில் இன்று (24.06.2024) காலை முதல் அதிக பனிமூட்டம் நிறைந்து காணப்படுகின்றது.
குறிப்பாக நுவரெலியா - ஹட்டன் (Hatton) பிரதான வீதியில் பிலக்பூல் சந்தி, வெண்டிகோனர், பங்களாஹத்த, நானுஓயா மற்றும் ரதல்ல குறுக்கு வீதி போன்ற இடங்களில் வழமைக்கு மாறாக அதிகளவான பனி மூட்டம் காணப்படுகின்றது.
தொடரும் மழை
இதன் காரணமாக, சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், நுவரெலியா - ஹட்டன் ஏ7 பிரதான வீதியில் சென்ற வாகனங்கள் அதிக ஒலி எழுப்பியவாறும், வாகன விளக்குகளை ஒளிரவிட்டும் செல்வதை அவதானிக்க முடிந்தது.
மேலும், தொடர்ந்து மழை பெய்வதால் அதிக குளிருடன் கூடிய காலநிலை காணப்படுகின்றது.
அதேவேளை, குறிப்பாக பிரதான வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகளுக்கும் எதிரே வரும் வாகனங்கள் தெரியாதபடி கடும் பனிமூட்டம் நிலவுவதால் விபத்துக்களை தடுக்கும் நோக்கில் மிகவும் அவதானமாக தங்களது வாகனங்களை செலுத்த வேண்டும் என போக்குவரத்து பொலிஸாரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அது மாத்திரமன்றி, வாகனங்களை செலுத்தும் போது தங்களுக்கு உரியத்தான பக்கத்தில் வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரச்செய்தவாறு வாகனங்களை செலுத்த வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri
