டெல்லியில் தொடருந்து மற்றும் விமான சேவைகள் பாதிப்பு
இந்திய தலைநகரான டெல்லியில் கடும் பனி மூட்டம் நிலவுவதால் விமான சேவை தொடர்ந்தும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
பயணிகள் நீண்ட நேரம் தங்கள் விமானத்திற்காக காத்திருக்கின்றனர். நாட்டின் வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது.
டெல்லியில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை தொடர்ச்சியாக குறைந்து வருகிறது.
விமானங்கள் இரத்து
வடமேற்கு இந்தியாவில் இமயமலையிலிருந்து வீசும் வடமேற்கு காற்று காரணமாக, வடமேற்கு மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்தியப்பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு குறைந்தபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் தொடர் பனிமூட்டம் காரணமாக தொடருந்து மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் டில்லியில் 21 சர்வதேச புறப்பாடுகள், 23 சர்வதேச வருகைகள், 33 உள்நாட்டு புறப்பாடுகள் மற்றும் 43 உள்நாட்டு வருகைகள் என மொத்தம் 120 விமானங்கள் மிகவும் தாமதாக இயக்கப்பட்டன.
அதேபோல 53 விமானங்கள் முழுவதுமாக இரத்து செய்யப்பட்டன. தொடருந்து சேவையை பொறுத்த வரையில் 20 தொடருந்துகளின் இயக்கத்தில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 6 மணி நேரம் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
