கொழும்பு பங்குச் சந்தையில் கடும் சரிவு
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (25) 183.16 அலகுகளாக பாரிய வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இது முந்தைய நாளுடன் ஒப்பிடும் போது 2.03 வீத சரிவாகும் என்பதுடன், நாள் முடிவில் அனைத்து பங்கு விலை குறியீட்டு மதிப்பு 8,828.08 அலகுகளாக பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையில், S&P SL20 சுட்டெண் நாளின் போது 78.27 புள்ளிகள் சரிந்து 2,866.23 புள்ளிகளாக பதிவாகியது. இது முந்தைய நாளுடன் ஒப்பிடும் போது 2.66 வீத சரிவாகும். இன்றைய மொத்த பரிவர்த்தனை விற்பனை முதல் 2.10 பில்லியனாக ரூபாவாக பதிவு செய்யப்பட்டது.
ஒரு நாளில் பதிவான மிகக் குறைந்த விற்பனை முதல்
இந்த வாரத்தில் ஒரு நாளில் பதிவான மிகக் குறைந்த விற்பனை முதல் இதுவாகும்.
1.89 பில்லியன் ரூபா உள்நாட்டு கொள்முதல் மற்றும் 2.03 பில்லியன் ரூபா உள்நாட்டு விற்பனையாகவும் பதிவாகியுள்ளதுடன் 115.67 மில்லியன் ரூபா வெளிநாட்டு கொள்முதல் மற்றும் 65.98 மில்லியன் ரூபா வெளிநாட்டு விற்பனையாக பதிவாகியுள்ளது.
எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ், எல்ஓஎல்சி ஹோல்டிங்ஸ், ஹேலிஸ், லங்கா ஐஓசி மற்றும் எய்ட்கென் ஸ்பென்ஸ் ஆகிய பங்குகளின் விலைகளில் ஏற்பட்ட சரிவு அனைத்து Equity சுட்டெண்களில் நாளின் வீழ்ச்சிக்கு முக்கிய உந்துதலாக இருந்தது.
இன்று, 157 நிறுவனங்களின் பங்குகளின் விலைகள் முந்தைய நாளை ஒப்பிடுகையில் குறைந்துள்ளதுடன் 54 நிறுவனங்களின் விலைகள் மட்டுமே அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri
