பண்டோரா விவகாரம்! - நாடாளுமன்றில் கடும் வார்த்தைப் பரிமாற்றங்கள்
பண்டோரா ஆவணங்களில், இலங்கையின் முன்னாள் பிரதி அமைச்சர் நிருபமா ராஜபக்ச (Nirupama Rajapaksa) மற்றும் அவரது கணவர் திருக்குமார் நடேசன் (Thirukumaran Nadesan) மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் கடுமையான வார்த்தைப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.
நிருபமா ராஜபக்ச மற்றும் அவரது கணவர் திருக்குமார் நடேசன் மீதான குற்றச்சாட்டுகளை அரசாங்கம் விசாரிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கோரியது.
நாடாளுமன்ற உறுப்பினர் துஷாரா இந்துனில் அமரசேனா (Thushara Indunil), பாடகி யொஹானி டி சில்வா இலங்கைக்கு புகழ் சேர்த்த போது, நிருபமா ராஜபக்ச தவறான காரணங்களுக்காக இலங்கையை சர்வதேசத்தின் கவனத்துக்கு ஈர்த்துள்ளார் என்று குறிப்பிட்டார்.
எனினும் இந்த குற்றச்சாட்டுகளுக்கும் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க (Asanka Shehan Semasinghe) கூறினார்.
திருக்குமார் நடேசனுக்கு முன்னாள் ஜனாதிபதிகள் ஜே.ஆர்.ஜயவர்த்தன, டி.பி.விஜேதுங்க, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் முன்னாள் பிரதமர் ரணசிங்க பிரேமதாச ஆகியோருடன் தொடர்புகளை கொண்டிருந்தார்.
எனவே எதிர்க்கட்சிகள் உண்மைகளை அறியாமல் பேசுவதாக அவர் குற்றம் சுமத்தினார்.

11வது வருட திருமண நாள், மிர்ச்சி செந்தில் வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ... வாழ்த்தும் ரசிகர்கள் Cineulagam
