யாழில் இரு தரப்புக்கு இடையில் கடும் மோதல்
யாழ்ப்பாணத்தில் இலங்கை போக்குவரத்து சபையினருக்கும் ஆட்டோ சாரதிகளுக்கும் இடையில் நேற்று மாலை மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.
யாழ்.நெல்லியடி பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட தகராறில் பேருந்து ஒன்றின் மீதும், சாரதி, நடத்துனர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.
தாக்குதலுக்குள்ளான சாரதி மற்றும் நடத்துனர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து இலங்கை போக்குவரத்து சபை ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம் நடாத்த தயாராகினர்.
எனினும் நெடுந்துார சேவைகள் மற்றும் பாடசாலை சேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு பணிப்புறக்கணிப்பை நிறுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதன்போது தமது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும், நெல்லியடி பேருந்து நிலையத்தில் உள்ள நீண்டகால இழுபறி தீர்க்கப்படவேண்டும் என்ற 3 கோரிக்கைகளை நிறைவேற்ற பொலிஸார் உறுதியளித்துள்ளனர்.
ஈஸ்வரி பற்றி வந்த போன் கால், பதற்றத்தில் நந்தினி, என்ன ஆனது... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam