திருகோணமலையினுள் நுழையும் வாகனங்கள் பலத்த சோதனை
திருகோணமலை மாவட்டத்தினுள் நுரையும் வாகனங்கள் பொலிஸாரால் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுத்தப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்தமையால் மக்களின் நலன் கருதிக் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் இன்று இதுவரை 42 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு ரீதியாகத் திருகோணமலை 12, கந்தளாய் 9, கிண்ணியா 5, மூதூர் 4, ஹோமரன்கடவெல 3, சேருவாவில 3, குறிஞ்சாக்கேணி 2, குச்சவெளி 1, உப்புவெளி 1 என தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்திற்கு வெளியிடங்களிலிருந்து பயணிகளும், வாகனங்களும் நுழைவதற்குத் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தின் பிரதான எல்லைகளில் பொலிஸார் வீதி தடைகளை ஏற்படுத்தி உள்ளனர். அவசர தேவைகளுக்கு வருவோரும் வெளிச்செல்வோரும் அனுமதிக்கப்படுகின்றனர்.
வாகனங்கள் கடுமையான சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தின் ஒவ்வொரு எல்லைப்பகுதிகளிலும் இச்சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
