சஜித் ஆட்சியில் பணம் சம்பாதிக்க ரிஷாட் கோரிய அமைச்சுப்பதவி: பகிரங்க குற்றச்சாட்டு
நிறைய பணம் சம்பாதிக்கக்கூடிய அமைச்சு ஒன்றை வழங்குமாறு சஜித் பிரேமதாசவிடம் ரிஷாட் பதியுதீன் நிபந்தனைகளை விதித்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த நாடாளுமன்றத்தில் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிகள் தொடர்பாக பல நிபந்தனைகளை முன்வைத்து பதியுதீன் , சஜித் பிரேமதாசவுடன் இணைந்துள்ளார் என இஷாக் ரஹ்மான் கூறியுள்ளார்.
விதிக்கப்பட்டுள்ள நிபந்தனை
அத்துடன் சம்பந்தப்பட்ட அமைச்சுக்கு வழங்கப்பட்டும் நிறுவனங்கள் நிறைய பணம் சம்பாதிக்கும் வகையில் அமைய வேண்டும் என அவர் நிபந்தனை விதித்துள்ளதாக இஷாக் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

நாமலின் அரசாங்கத்தில் பிரதமர்..! சஜித்திற்கு அதிக வாய்ப்பு - ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய உறவினரது தகவல்
முன்னதாக, ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது விருப்பத்தை வெளியிட்டிருந்தனர்.
இதன்படி இஷாக் ரஹ்மான், அலி சப்ரி ரஹீம், எஸ்.எம்.எம்.முஷாரப் ஆகிய உறுப்பினர்கள் இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இந்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 10 மணி நேரம் முன்

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
