பசில் அம்பலப்படுத்திய தகவல்!மொட்டு கட்சிக்குள் வெடித்தது சர்ச்சை
கடந்த மே மாதம் 9ஆம் திகதி காலி முகத்திடல் போராட்டத்தின் மீதான தாக்குதலுக்கு மொரட்டுவ முன்னாள் மேயர் சமன்லால் பெர்னாண்டோவே காரணம் என பசில் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக கட்சிப் பிரதிநிதிகள் விசேட சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர்.
காரசாரமான கருத்து பரிமாற்றம்
இந்த சந்திப்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் நடவடிக்கைகள் மற்றும் மே மாதம் முதலாம் திகதி நடைபெறவுள்ள பேரணி தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இதன்போதே கடந்த மே மாதம் 9ஆம் திகதி காலி முகத்திடல் போராட்டத்தின் மீதான தாக்குதலுக்கு மொரட்டுவ முன்னாள் மேயர் சமன்லால் பெர்னாண்டோவே காரணம் என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதனால் சமன்லால் பெர்னாண்டோவுக்கும் பசில் ராஜபக்சவுக்கும் இடையில் காரசாரமான கருத்து பரிமாற்றம் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 6 நாட்கள் முன்

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri
