வெப்ப அலைகளை எதிர்கொள்ள தயாராக வேண்டும்! ஐ.நா எச்சரிக்கை
வெப்ப அலை நிகழ்வுகள் தொடர்ந்து தீவிரமடையும் எனவும், அதனை எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும் எனவும் ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐ.நா.வின் உலக வானிலை அமைப்பின், மூத்த வெப்ப ஆலோசகர் ஜான் நேர்ன் அளித்த பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மக்கள் வெப்பத்தால் ஏற்படும் உடல் சோர்வினால் உயிரிழப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்
வெப்ப அலைகளை தடுக்க கார்பன் எரிபொருட்களை நிறுத்த வேண்டும். அனைத்தையும் மின்மயமாக்க வேண்டும். வளர்ந்து வரும் நகரமயமாக்கல் காரணமாக வெப்பம் நிலை அதிகரித்து காணப்படுகின்றன.
உலகின் மிக வேகமாக வெப்பமடையும் கண்டமான ஐரோப்பா, இத்தாலியின் சிசிலி மற்றும் சார்டினியா தீவுகளைத் தாக்கும் தற்போதைய வெப்ப அலை அதிகரித்து காணப்படுகின்றன.
மேலும், அங்கு அதிகபட்சமாக 48 டிகிரி செல்சியஸ் (118 டிகிரி பாரன்ஹீட்) இருக்கும் என ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |