இங்கிலாந்தில் வெப்ப சுகாதார எச்சரிக்கை விடுப்பு - சூரிய ஒளியை தவிர்க்குமாறு கோரிக்கை
இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு வெப்ப சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, இங்கிலாந்தில் இதுவரை ஆண்டின் வெப்பமான நாட்கள் இந்த காலப்பகுதியில் பதிவாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் வட ஆபிரிக்காவிலிருந்து வெப்பக்காற்று பரவுவதால், வெள்ளிக்கிழமை தென்கிழக்கு இங்கிலாந்தின் சில பகுதிகளில் வெப்பநிலை 33C (91.4F) ஐ எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரித்தானியா ஹெல்த் செக்யூரிட்டி ஏஜென்சி தெற்கு மற்றும் மத்திய இங்கிலாந்திற்கு இரண்டாம் நிலை எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அதிக வெப்பநிலை பொதுமக்களின் ஆரோக்கியத்தை பாதிக்கலாம் என்று அர்த்தம்.
இதன்படி, மதிய நேரங்களில் சூரிய ஒளியில் அதிக நேரம் இருப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்துள்ளது.
நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரிக்கும்
இது நாட்டின் சில பகுதிகளில் ஆண்டின் அதிக வெப்பமான வானிலையாக இருக்கும் என்று வானிலை அலுவலகத்தின் அலெக்ஸ் டீக்கின் தெரிவித்துள்ளார். எனினும் அது எல்லா இடங்களிலும் சூடாகவும் வெயிலாகவும் இருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தென்கிழக்கு முழுவதும் 28C (82.4F) அதிகபட்ச வெப்பநிலையுடன், புதன்கிழமை முதல் நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரிக்கும் என்று அவர் கூறினார். இருப்பினும் இங்கிலாந்தின் வடமேற்கில் 15C (59F) வெப்பநிலை பதிவாகும் என அவர் கூறியுள்ளார்.
தென்கிழக்கு வடக்கு லண்டன் மற்றும் கேம்பிரிட்ஜைச் சுற்றி 33C (91.4F) வரை வெப்பநிலையின் உச்சம் வெள்ளிக்கிழமையாக பதிவாகும், ஸ்காட்லாந்தின் கிழக்கில், வெப்பநிலை 20களின் நடுப்பகுதியைத் தாக்கும்.
எவ்வாறாயினும், 1976ம் ஆண்டு சவுத்தாம்ப்டனில் பதிவு செய்யப்பட்ட இங்கிலாந்தின் வெப்பமான ஜூன் நாளுக்கான சாதனையை முறியடிக்க வெப்பநிலை 35.6C (96.1F) பதிவாக வேண்டும்.