அதிகரிக்கும் வெப்பம்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இன்றைய நாளுக்கான (28.05.2023)வெப்பச் சுட்டெண் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் வெப்பச் சுட்டெண், மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை 'எச்சரிக்கை' மட்டத்திற்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெப்பநிலை அதிகரிப்பு
எனவே பொதுமக்கள் முடிந்தவரை அடிக்கடி நிழலில் ஓய்வெடுக்கவும், கடுமையான வெளிப்புற நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும், நிழலைக் கண்டறியவும், இலகுரக மற்றும் வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இவ்வாறு வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்களை கவனமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

நயன்தாராவுடன் தனது முதல் படத்தில் நடித்துள்ள மகாநதி சீரியல் நடிகர்.. அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam

இந்த 3 சூழ்நிலைகள்... இந்தியாவிற்கு எதிராக மீண்டும் அணு ஆயுத மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் News Lankasri
