தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றிகளை தெரிவித்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
அண்மையில் தமிழக முதலமைச்சர் மரியாதைக்குரிய மு.க.ஸ்டாலின் தமிழகத்திலுள்ள எமது ஈழச்சகோதர தமிழர் ஏதிலிகளுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகம் செய்யும் நல்ல நோக்கத்துடன் 317 கோடி இந்திய ரூபாய்களை ஒதுக்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.
இதன் மூலமாக மூன்று இலட்சத்து 4269 ஈழத்து உறவுகள் பயனடையவுள்ளனர். இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இதயப்பூர்வமான நன்றிகளை ஈழத்தமிழர்கள் சார்பாகத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
தொப்புள் கொடியுறவு மீதான அன்பினை ஆதரவினை வெளிக்காட்டியதோடு மட்டுமல்லாமல்,செயற்படுத்தவுள்ள முதலமைச்சரை வாழ்த்துகின்றோம், வரவேற்கின்றோம். ஈழத் தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்கள் நலமாகப் பலமாகச் சமத்துவமாக வாழ வேண்டும் என்பதே எமது பிரார்த்தனையாகும்.
1983 கறுப்பு யூலைக் கலவரத்தால் எமது மக்கள் சொந்த நாட்டிலே வாழ முடியாமல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.
அப்படியான எமது சகோதரர்களை இந்த நேரத்தில் பரோபகார சிந்தனையுடன் உதவிக்கரம் நீட்டி அரவணைத்த முதலமைச்சர்,எதிர்காலத்திலும் இலங்கையில் தமிழர்கள் சுயமரியாதையுடன் சுயநிர்ணய உரிமையுடன் வாழ்வதற்கும் தமது அரசியல் பலத்தையும் ஆளுமையையும் வழங்குவார் என நம்புகின்றோம் என தெரிவித்துள்ளார்.
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam
Bigg Boss: அன்று பிக்பாஸாக இருந்தவர் இன்று போட்டியாளராக வந்தது தெரியுமா?... இதுவரை தெரிந்திடாத உண்மை Manithan