டயனா கமகேவின் மனு மீதான விசாரணை ஜனவரி 19 வரை ஒத்திவைப்பு
ஐக்கிய மக்கள் சக்தி தனது கட்சி உறுப்புரிமையை இரத்துச் செய்ததன் ஊடாக தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்தாவதைத் தடுக்கும் வகையில் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி, இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, தாக்கல் செய்த மனு மீதான விசாரணை எதிர்வரும் 19ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த மனு இன்று (08.01.2024) உயர் நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொட முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
11 பேர் பிரதிவாதிகள்
இந்த மனுவில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, அதன் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட 11 பேர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தமை உள்ளிட்ட தனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை விசாரித்து, கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை வலுவற்றதாக்குமாறும் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே குறித்த மனுவில் கோரியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |