ஷஷி வீரவன்சவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
முறையற்ற இராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருந்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஷஷி வீரவன்ச என அழைக்கப்படும் ரணசிங்க முதியன்சேலாகே ஷிர்ஜா உதயந்தியின் தண்டனை தொடர்பான நடவடிக்கைகளை இந்த மாதம் 26ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டுள்ளார்.
குறித்த உத்தரவானது இன்று (12.10.2026) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அபராதத்தைச் செலுத்தத் தவறினால்
இந்த வழக்கின் பிரதிவாதி மேல்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேன்முறையீடு தொடர்பான நடவடிக்கைகளின் பதிவுகளை, எதிர்வரும் 26ஆம் திகதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் பிரதிவாதி தரப்புக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
பிரதிவாதி சார்பில் முன்னிலையான சட்டத்தரணி முன்வைத்த கோரிக்கையைப் பரிசீலித்த பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த மேன்முறையீட்டு வழக்கு இன்று (12) மேல்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்ததால், வழக்கை வேறொரு திகதிக்கு ஒத்திவைக்குமாறு சட்டத்தரணி கோரியிருந்தார்.
கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் திகதி, முறையற்ற இராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஷஷி வீரவன்ச குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
அபராதத்தைச் செலுத்தத் தவறினால் மேலும் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் அப்போது உத்தரவிடப்பட்டது. இந்தநிலையில், குறித்த தீர்ப்பை 2026ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan