”ஒமிக்ரோன்“ தொற்றை தடுப்பதற்கு மூன்று முகக்கவசங்கள்
கொரோனாவின் ஒமிக்ரோன் தொற்று பரவல் ஆரம்பித்த பின்னரும் “நீங்கள் தொடர்ந்தும் துணியிலான முகக்கவசங்களை அணிபராக இருந்தால்” மூன்று முகக்கவசங்களை அணியவேண்டும் என்று சில வைத்திய நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
அமெரிக்க சீஎன்என் செய்திச்சேவையின் செய்தி ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்படடுள்ளது.
மருத்துவ ஆய்வாளரான Leana Wen இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஓமிக்ரோன் இப்போது அமெரிக்காவில் கொரோனா வைரஸின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் ஒருவர் குறைந்தபட்சம் மூன்று அடுக்கு அறுவை சிகிச்சை முகமூடியை அணிந்திருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு அகற்றப்படக்கூடிய முகக்கவசங்களை அணிந்து அதற்கு மேல் துணியிலான முகக்கவசத்தை அணியவேண்டும் என்று அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்
எனினும் துணியிலான ஒரு முக்கவசத்தை மாத்திரம் அணியவேண்டாம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
பொது இடங்களுக்கு செல்லும்போது கேஎன் 95 அல்லது என் 95 முகக்கவசங்களை அணியவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவே சிறிய துகள்கள் மூன்று அல்லது வாய் வழியாக உடலில் நுழைவதை தடுக்கிறது என்று மருத்துவ நிபுணர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri
