இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு
மேல், தென், கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் குருநாகல், கிளிநொச்சி, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் இன்று அதிகளவில் வெப்பநிலை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன் விளைவாக, அதிக நேரம் வெளியில் இருப்பதும், அதிக நேரம் வெளியிட செயல்களில் ஈடுபடுவதும் நீரிழப்பு மற்றும் தசைப்பிடிப்புக்கு வழிவகுக்கும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுகாதாரத் துறையினரின் கோரிக்கை

எனவே, வெளியிடங்களில் அதிக நேரம் இருப்பவர்கள் அதிக தண்ணீர் அருந்தவும், முடிந்தவரை நிழலான இடங்களில் ஓய்வெடுக்கவும் சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களை வீடுகளிலேயே கவனித்துக் கொள்ளுமாறு சுகாதாரத் துறை மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
இதற்கிடையில், வளிமண்டலவியல் திணைக்களம் அதிக வெப்பநிலைக்கான முன்னறிவித்தல் விடுத்துள்ளதால், மாடுகளை எப்போதும் நிழலான இடத்தில் வைக்குமாறு பால் பண்ணையாளர்களிடம் மில்கோ நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.
மேலும் கால்நடைகளுக்கு இயன்ற அளவு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியிட்டனர்.
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri