எழுமாறான கோவிட் பரிசோதனைகளை அதிகரிக்குமாறு சுகாதார தரப்பினர் கோரிக்கை
எழுமாறாக நடாத்தப்படும் கோவிட் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட வேண்டுமென சுகாதாரத்தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமூகத்தில் கோவிட் தொற்று உறுதியாளர்கள் இருக்கக்கூடும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எழுமாறான அடிப்படையில் பீ.சீ.ஆர் மற்றும் என்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்வது மேலும் அதிகரிக்கப்பட வேண்டுமென அரசாங்க மருத்துவ அதிகாரிகள் (GMOF) அமைப்பு அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
நோய் அறிகுறி தென்படாத நோய் தொற்று உறுதியாளர்கள் சமூகத்தில் இருக்கலாம் எனவும் அவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவோ அல்லது சிகிச்சை பெற்றுக்கொள்ளவோ கூடிய சாத்தியங்கள் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.
நாட்டில் கோவிட் தொற்று உறுதியாளர்கள் குறித்த புள்ளி விபரங்களை விடவும் மெய்யான எண்ணிக்கை அதிகமாக இருக்கும் எனவும், அதற்கு குறைவான எண்ணிக்கையில் பரிசோதனைகள் மேற்கொள்வதே காரணம் எனவும் தெரிவித்துள்ளது.
எழுமாறான அடிப்படையில் என்டிஜன் மற்றும் பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்வது மிகவும் அவசியமானது என தெரிவித்துள்ளது.
பொதுமக்களும் சுகாதார வழிகாட்டல்களை உரிய முறையில் பின்பற்றுவதில்லை எனவும் சுட்டிகாட்டியுள்ளது.
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam