விசேட வைத்திய நிபுணர்கள் 63 வயது வரையில் சேவையாற்ற அனுமதி
விசேட வைத்திய நிபுணர்கள் 63 வயது வரையில் சேவையில் நீடிப்பதற்கு அனுமதிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுகாதார அமைச்சர், சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் அமைச்சரவைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.
60 வயதை பூர்த்தி செய்த விசேட வைத்திய நிபுணர்களை ஓய்வுறுத்துமாறு அமைச்சரவை கடந்த 2022ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி தீர்மானம் நிறைவேற்றியது.

நீதிமன்றில் மனுத்தாக்கல்
இந்த தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கோரி 176 விசேட வைத்திய நிபுணர்கள் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைவர் நீதிதிபதி நிஷங்க பந்துல கருணாரட்ன மற்றும் நீதிபதி எம்.ஏ.ஆர் மரிக்கார் ஆகியோர் பரிசீலனை செய்தனர்.
இதனை தொடர்ந்து விசேட வைத்திய நிபுணர்கள் 63 வயது வரையில் சேவையில் நீடிப்பதற்கு அனுமதிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈஸ்வரி பற்றி வந்த போன் கால், பதற்றத்தில் நந்தினி, என்ன ஆனது... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
கொத்தாக 15 பேர்களைப் பலி வாங்கிய தந்தையும் மகனும்: கடுமையான முடிவெடுக்கும் அவுஸ்திரேலியா News Lankasri