போலி மருந்தின் மூலம் சிகிச்சை பெற்ற நோயாளிகளின் விபரங்களை சேகரிக்கும் சுகாதார அமைச்சகம்
போலி மனித இம்யூனோகுளோபிலினை அரசாங்கத்திற்கு விற்பனை செய்த Isolez Biotech Pharma AG நிறுவனத்தால் மருத்துவ விநியோகப் பிரிவுக்கு, விற்கப்பட்ட போலியான counterfeit Rituximab 500mg ஊசி மூலம், சிகிச்சை பெற்ற அனைத்து நோயாளிகளின் விபரங்களையும் இலங்கையின் சுகாதார அமைச்சகம் சேகரிக்கத் தொடங்கியுள்ளது.
அத்துடன், அனைத்து பொதுத்துறை சுகாதார நிறுவனங்களின் தலைவர்களும் அத்தகைய நோயாளிகள் மற்றும் எஞ்சியிருக்கும் மருந்துகளின் அளவு பற்றிய தகவல்களை உடனடியாக வழங்குமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள உரிமையாளர்
இதற்கிடையில், நோயாளிகளுக்கு வழங்கப்படும் இம்யூனோகுளோபுலின் குப்பிகளில் என்ன இருந்தது என்பதை மருத்துவ ஆய்வகங்கள் இன்னும் வெளியிடவில்லை.
ஐசோலெஸ் உரிமையாளர் ஹேவகே சுதத் ஜானக பெர்னாண்டோ கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தனது நிறுவனம் தேசிய இரத்த மாற்றுச் சேவையிலிருந்து (என்டிபிஎஸ்) பிளாஸ்மாவைக் கொண்டு உள்நாட்டில் இம்யூனோகுளோபுலின் தயாரித்ததாகக் அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |