நாட்டு மக்களுக்கு சுகாதார அமைச்சிடமிருந்து விரைவில் வெளிவரவுள்ள அறிவிப்பு
கோவிட் வைரஸ் பரவல் காரணமாக உடலில் ஏற்படக்கூடிய நோய் அறிகுறிகள் குறித்து பொது மக்களுக்கு தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், நோய்த் தொற்று ஏற்பட்டவர்களுக்கும், தொற்று ஏற்பட்டவர்களுடன் நெருங்கிப் பழகியவர்களுக்கும் ஆவோசனைகளை வழங்கத் தேவையான வழிகாட்டுதல்கள் கோவையை அமைச்சு தயாரித்துள்ளது.
அத்துடன், அவசர சந்தர்ப்பங்களின் போது வைத்தியசாலைகளை தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி இலக்கமும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இதன் கீழ் அன்ரிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் இடங்கள் பற்றிய தகவல்களை அறிவிக்கவும் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Bigg Boss: அன்று பிக்பாஸாக இருந்தவர் இன்று போட்டியாளராக வந்தது தெரியுமா?... இதுவரை தெரிந்திடாத உண்மை Manithan