மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சுகாதார அமைச்சர்
சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரண மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இதன்போது அவர் தலைமையில் முழுமையான சிகிச்சை முறை எனும் தலைப்பில் கிழக்கு மாகாண மட்டத்தில் சுகாதார துறைசார்ந்து நிலவும் குறைபாடுகளை நிவர்த்திப்பது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இன்று (16.02.2024) இடம் பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது மட்டக்களப்பிலுள்ள கிழக்கு மாகாண சுகாதார பயிற்சி நிலையத்தில் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி டீ.ஜீ.எம்.கொஸ்தா அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது.
சுகாதார துறை சார் குறைபாடுகள்
கிழக்கு மாகாணத்தில் உள்ள நான்கு பிராந்திய சுகாதார பணிமனைகளின் கீழுள்ள வைத்தியசாலைகளில் நிலவும் சுகாதாரத்துறை சார் பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சருக்கு சுகாதார துறை சார் அதிகாரிகளினால் விளக்கமளிக்கப்பட்டதுடன், மாவட்டத்திற்கு முக்கிய தேவைகளாக காணப்படும் பல சுகாதார துறை சார் குறைபாடுகளை மாவட்டத்தின் இராஜாங்க அமைச்சர்களான சிவநேசதுரை சந்திரகாந்தன், எஸ்.வியாழேந்திரன் மற்றும் நாடளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், பைசல் காசீம் ஆகியோரினாலும் பல குறைபாடுகள் இதன் போது அமைச்சருக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்தோடு மாவட்டத்தில் மிக முக்கிய பிரச்சினைகளாக காணப்படும் ஒசுசல, lCU பற்றாக்குறை, ஆளணி பற்றாக்குறை, வாகன பற்றாக்குறை, பின்தங்கிய கிராமங்களில் காணப்படும் வைத்தியசாலைகளை மேம்படுத்துவதன் அவசியம் மற்றும் பழமை வாய்ந்த வாழைச்சேனை வைத்தியசாலையினை தரமுயர்த்துவது தொடர்பாகவும் இராஜாங்க அமைச்சர்களால் இதன் போது அமைச்சருக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
நிதி ஒதுக்கீடு
குறைகளை கேட்டறிந்துகொண்ட அமைச்சர் அவற்றிற்கான தீர்வுகளை தாம் மிக விரைவில் பெற்றுத் தருவதாகவும், கிழக்கு மாகாண ஆளுநரினால் நிவர்த்திக்க முடியுமான சில விடயங்களை அவர் முடித்துத் தருவார் என தெரிவித்ததுடன், பாரிய செலவில் முன்னெடுக்கப்பட வேண்டிய குறைபாடுகளை அடுத்த ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டில் நிவர்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், நாடளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசீம், இரா.சாணக்கியன், அமைச்சுக்களின் செயலாளர்கள், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன், கிழக்கு மாகாணத்தின் பிராந்திய சுகாதார பணிப்பாளர்கள், திணைக்களம் சார் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
மேலதிக செய்தி-ருசாத்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 16 மணி நேரம் முன்

கணவன் உடலை டிரம்மில் வைத்து அடைத்த நிலையில்.., மணமக்களுக்கு பிளாஸ்டிக் டிரம் பரிசளித்த நண்பர்கள் News Lankasri

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam
