மூடப்பட்ட மற்றும் மூடப்படும் நிலையிலுள்ள வைத்தியசாலைகள் தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
மூடப்பட்ட வைத்தியசாலைகள் மற்றும் மூடப்படும் நிலையில் உள்ள வைத்தியசாலைகளின் செயற்பாடுகளை மீண்டும் தொடங்குமாறு சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கலந்துரையாடல்

தேசியக் கொடிக்கு தடை விதிக்கவும்: மாவீரர் நாளுக்கு நீதிமன்றம் அனுமதி! மக்களிற்கு பகிரங்க அழைப்பு (Video)
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) பிரதிநிதிகளுடன் இன்று கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலை அடுத்து குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலின் போது, இலங்கை முழுவதும் தற்போது 40 அரச வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும், 100 அரச வைத்தியசாலைகள் மூடப்படுவதை நோக்கிச் செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசேட குழுவை நியமிக்குமாறு தெரிவிப்பு

மாவீரர்களை நினைவேந்த தயார் நிலையில் தாயகம் : கிழக்கில் வலம் வரும் போலி சுவரொட்டிகள் - சதி நடவடிக்கை அம்பலம்
அரச வைத்தியசாலைகளை சூழவுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை ஆராய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தலைமையில் GMOA உறுப்பினர்களைக் கொண்ட விசேட குழுவொன்றை நியமிக்குமாறும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வட மாகாணம், புத்தளம் மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் வைத்தியர் பற்றாக்குறை காரணமாக வைத்தியசாலைகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சுகாதார அமைச்சர், தொழிற்சங்கங்கள் மற்றும் சுகாதாரத் துறையில் உள்ள நிபுணர்களுடன் இணைந்து இந்தத் துறைக்குள் உள்ள நெருக்கடியைத் தீர்ப்பதற்கு உறுதியளித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




