மருத்துவமனையில் தேங்கி கிடக்கும் சடலங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சர் பிறப்பித்துள்ள உத்தரவு
நாட்டிலுள்ள மருத்துவமனைகளில் நீண்ட காலமாக தேங்கியுள்ள, அடையாளம் காணப்படாத உடல்களை அப்புறப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நீண்டகாலமாக மருத்துவமனைகளில் தேங்கியிருந்த உடல்கள் அனுமதியுடன் அப்புறப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், மேலும் பல சடலங்கள் சட்ட நடவடிக்கை மற்றும் பல்வேறு காரணங்களால் சில உடல்களை மருத்துவமனைகளில் இருந்து விடுவிக்க முடியாதுள்ளதாகவும், அவற்றை விரைவில் விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
இதனையடுத்து மீதமுள்ள உடல்களை விரைவில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளன.
மேலும்,மருத்துவமனைகளில் தேவையற்றவாறு உடல்கள் தேங்குவதைத் தடுக்க எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.





அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri
