புபுது ஜாகொடவின் குற்றச்சாட்டுக்கு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மறுப்பு
முன்னணி சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜாகொடவின் குற்றச்சாட்டை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மறுத்துள்ளார்.
இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் கறுப்புப்பட்டியில் உள்ளடக்கப்பட்டுள்ள இந்தியாவின் கௌசிக் மருந்து நிறுவனத்திடமிருந்து மருந்துப் பொருட்களைக் கொள்வனவு செய்ய அமைச்சர் முனைவதாக புபுது ஜாகொட சுமத்திய குற்றச்சாட்டையே அமைச்சர் மறுத்துள்ளார்.
அண்மையில் இந்தியாவுக்கு சென்றிருந்த அமைச்சர், கௌசிக் மருந்து நிறுவனத்தின் செலவில், ஐந்து நட்சத்திர விருந்தகத்தில் தங்கியிருந்ததாக ஜாகொட சுமத்திய குற்றச்சாட்டையும் அமைச்சர் மறுத்தார்.
இந்தியாவுக்கான விமான செலவு

இந்தியாவுக்கான விமானச் செலவை தமது நண்பர் ஒருவர் செலுத்தியதாகவும், அதனை தாம் திருப்பிச் செலுத்தியதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அடுத்த மூன்று மாத காலத்திற்கு தேவையான மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு 60 மில்லியன் அமெரிக்க டொலர்களை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.
இந்தநிலையில் ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களை புறக்கணித்து, தாம் மருந்துகளை
கொள்வனவு செய்ய முயற்சிப்பதாக கூறப்படுவதையும் அமைச்சர் நிராகரித்தார்.
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri