சிறுபிள்ளை போல் கருத்துரைக்கும் கெஹெலிய: விமல் முன்வைத்த குற்றச்சாட்டு
மருந்துத் தட்டுப்பாடு மற்றும் தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் சுகாதாரத்துறை அமைச்சர் சிறுபிள்ளை போல் கருத்துரைக்கின்றார் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
மேலும், சுகாதாரத்துறை மீதான நம்பிக்கையை கேள்விக்குறியாகியுள்ள சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோர், உடன் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மருந்துகளின் தரம் தொடர்பில் பாரிய சர்ச்சை

"பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீண்டு விட்டோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அமைச்சரவை உறுப்பினர்கள் குறிப்பிட்டுக் கொள்கின்றார்கள்.
ஆனால், நடைமுறையில் நிலைமை எதிர்மறையாக உள்ளது. பொருளாதாரப் பாதிப்பின் ஒட்டுமொத்த சுமையும் நடுத்தர மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இலவச சுகாதார சேவை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. மருந்துத் தட்டுப்பாடு நெருக்கடி தோற்றம் பெற்றவுடன் அவசர கொள்வனவு முறையில் திறந்த விலை மனுக்கோரல் இல்லாமல் மருந்துப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
இந்தியாவில் இருந்து அவசர கொள்வனவு முறையில் இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளின் தரம் தொடர்பில் பாரிய சர்ச்சை தோற்றம் பெற்றுள்ளது.
மருந்துத் தட்டுப்பாடு மற்றும் தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் சுகாதாரத்துறை அமைச்சர் சிறுபிள்ளை போல் கருத்துரைக்கின்றார்." என தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri
குவைத்தின் உப்பு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கிய ஈரான்., அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி News Lankasri
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri