சுகாதார அமைச்சருக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் சந்திப்பு
சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரணவிற்கும் சுகாதார தொழிற்சங்கங்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு நடைபெறவுள்ளது.
இன்றைய தினம் முற்பகல் இந்த சந்திப்பு நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுகாதாரதுறைசார் 72 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் சுகாதார அமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
கொடுப்பனவு அதிகரிப்பு
கொடுப்பனவு அதிகரிப்பு உள்ளிட்ட தொழிற்சங்கங்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடாபில் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட உள்ளது.
தொழிற்சங்கங்களினால் விடுக்கப்பட்டு வரும் கோரிக்கைகள் குறித்து சுகாதார அமைச்சரினால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் இன்றைய தினம் தொழிற்சங்கங்களிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
அரசாங்க மருத்துவர்களுக்கு வழங்கப்படும் 35000 ரூபா கொடுப்பனவு தமக்கும் வழங்கப்பட வேண்டுமெனக் கோரி சுகாதார சேவையில் ஈடுபட்டு வரும் தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




