யாழில் சுகாதார பரிசோதகர்கள் திடீர் சுற்றிவளைப்பு
யாழ்ப்பாணம் - வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் பரிசோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
தவிசாளரின் அறிவுறுத்தலின்படி, குறித்த பரிசோதனை நடவடிக்கை நேற்று இரவு (02.04.2026) மற்றும் இன்று காலை (03.04.2026) முன்னெடுக்கப்பட்டது.
4 வாகனங்களுக்கு எதிராக நடவடிக்கை
இதன்போது, சுகாதார நடைமுறைகளை முறையாகப் பின்பற்றாமல் பேக்கரி உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்த நடமாடும் நான்கு வாகனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து, குறித்த வாகனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இனிவரும் காலங்களிலும் இதுபோன்ற திடீர் சுகாதார பரிசோதனைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என தவிசாளர் தெரிவித்துள்ளார்.
