வவுனியாவில் சுற்றிவளைக்கப்பட்ட வீடு - கைப்பற்றப்பட்ட 580 லீட்டர் சீனிப் பாணி
வவுனியாவில் சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது வீடு ஒன்றில் விற்பனை செய்வதற்காக தயார்படுத்தப்பட்ட 580 லீட்டர் சீனிப் பாணி கைப்பற்றப்பட்டதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
வவுனியா - வேப்பங்குளம், 8ஆம் ஒழுங்கை, ஊர்மிளா கோட்டம் பகுதியில் உள்ள வீடு ஒன்று நேற்று இரவு (26.06.2026) சுற்றிவளைத்து சோதனை நடவடிக்கையினை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது குறித்த வீட்டில் 40 லீட்டர் கொண்ட 7 கலன்களில் நிரப்பட்டிருந்த சீனிப் பாணி மற்றும் பரல்களில் காய்ச்சப்பட்டிருந்த சீனி பாணி என 580 லீட்டர் சீனிப்பாணி கண்டுபிடிக்கப்பட்டது.
சந்தேகநபர்கள் தப்பியோட்டம்
அத்துடன் அவற்றை அடைப்பதற்கான வெற்றுப்போத்தல்கள், தேன்வதைகள் என்பனவும் கண்டு பிடிக்கப்பட்டதுடன் அவை பொது சுகாதார பரிசோதகர்களால் மீட்க்கப்பட்டது.
இதன்போது, குறித்த வீட்டில் சீனிப் பாணியினை காய்ச்சி விற்பனை செய்த நபர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட இயக்குநர் பாக்யராஜ் உடலம்..! நேரில் அஞ்சலி செலுத்தவுள்ள முதலமைச்சர் விஜய்
சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளரான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணகளின் பின் குறித்த பொருட்களை நீதிமன்றில் ஒப்படைக்கவுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் சுகாதார பாசோதகர்கள் மேலும் தெரிவித்தனர்.




