சுகாதார வழிகாட்டல்கள் தொடர்ந்தும் பின்பற்றப்பட வேண்டும் – டொக்டர் சமித கினிகே
சுகாதார வழிகாட்டல்கள் தொடர்ந்தும் பின்பற்றப்பட வேண்டுமென தொற்று நோய்ப்பிரிவின் பிரதானி டொக்டர் சமித கினிகே (Samitha Ginike) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
நாட்டில் கோவிட் கட்டுப்பாடு தொடர்பில் ஓரளவு சாதக நிலை உருவாகியுள்ளது. கடந்த காலங்களைப் போன்று மீண்டும் சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்றப்படாவிட்டால் மீண்டும் நோய்த் தொற்று பரவுகை அதிகரிக்கும்.
கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் மக்கள் ஒப்பீட்டளவில் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவதனை நாம் அவதானித்தோம். அதன் விளைவாகவே கோவிட் கட்டுப்பாட்டில் ஓரளவு சாதக நிலைமை உருவாகியுள்ளது.
எனினும், இந்த சுகாதார கட்டுப்பாடுகளை இனி பின்பற்றக்கூடாது என்று இதன் மூலம் அர்த்தப்படாது. நாள் தோறும் சராசரியாக ஆயிரம் நோய்த் தொற்று உறுதியாளர்கள் பதிவாகின்றனர் என்பது சாகமான நிலையல்ல.
எனவே, இதனை முகாமைத்துவம் செய்து கொள்ளாவிட்டால் ஆபத்துக்களை எதிர்நோக்க நேரிடும் என டொக்டர் சமித கினிகே தெரிவித்துள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 மணி நேரம் முன்

காரை நிறுத்திய பொலிசாரிடம் மனைவிக்கு பிரசவ வலி என்று கூறிய பிரித்தானியர்: தெரியவந்த உண்மை News Lankasri

உறுதியான பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்! வாட்டர் மெலன் ஸ்டார் முதல் விக்கல்ஸ் விக்ரம் வரை.. Cineulagam

பிரித்தானியாவின் 23 பகுதிகளை குறிவைத்திருக்கும் ரஷ்யா... வெளியான வரைபடத்தால் அதிர்ச்சி News Lankasri

துபாயில் சிறையில் இருந்து விடுதலையான 19 வயது பிரித்தானிய இளைஞர்: லண்டன் சாலையில் சோகம் News Lankasri
