பாடசாலை மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு
தற்போது நிலவும் காலநிலை மாற்றம் காரணமாக பாடசாலை மாணவர்களுக்கு வழங்க வேண்டிய சுகாதார வழிகாட்டல்களை சுகாதார மற்றும் கல்வி ஆகிய அமைச்சுக்கள் வெளியிட்டுள்ளன.
அதிக வெப்பநிலையுடனான காலநிலையை எதிர்கொள்ளும் போது, வியர்வை மற்றும் உமிழ்நீரை வெளியேற்றுவதால், தசைப்பிடிப்பு, அதிக சோர்வு மற்றும் பக்கவாதம் ஏற்படக்கூடும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மாணவர்களுக்கான அறிவுறுத்தல்கள்
அதன்படி, அதிக வெப்பநிலையுடனான நாட்களில், இல்ல விளையாட்டு போட்டிக்களை நடத்துவதை தவிர்க்குமாறு சுகாதார அமைச்சினால், கல்வி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இடைவேளை நேரங்களில் வெளி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என மாணவர்களிடம் கோரப்பட்டுள்ளது.
அத்துடன், அதிக குடிநீரை அருந்தவும், அதிக சோர்வு நிலையை போக்க இரண்டு சிறு ஓய்வு காலங்களை வழங்குவது சிறந்தது என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan
