மன்னாரில் சுகாதாரத் துறையினர் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை
மன்னாரில் உள்ள உணவகங்கள், சிற்றுடிச்சாலைகள், வீதி உணவகங்கள் மீது மன்னார் பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை இணைந்து விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
பண்டிகைக் காலத்தின் போது அதிகளவான சுகாதாரமற்ற உணவுகள் மற்றும் சிற்றுண்டிகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமைய இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உணவகம் மீது சட்ட நடவடிக்கை
மன்னார் நகர் பகுதியில் சுகாதாரமற்ற முறையில் உணவுகளை தயாரித்தல், அசுத்தமாக உணவு தயாரிக்கும் பகுதியை வைத்திருத்தல், சூடான உணவுகளை சுகாதார விதிமுறைகளை மீறி பிளாஸ்டிக் வாளியில் களஞ்சியப்படுத்தல் போன்ற குற்றங்களுக்காக உணவகம் ஒன்றின் மீது சுகாதார துறையினர் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், குறித்த உணவுகளையும் பயன்படுத்த முடியாத வகையில் அழித்துள்ளனர்.
மேலும், பண்டிகைக்காலங்களில் சாலையோரங்களில் அமைக்கப்பட்டுள்ள கடைகளில் உணவுகளை வாங்கி சாப்பிடுபவர்கள் சற்று அவதானத்துடன் இருக்குமாறு சுகாதாரத் துறையினர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam