புதுக்குடியிருப்பில் அதிரடியாக களமிறங்கிய சுகாதார பரிசோதகர்கள்
தேவிபுரம் உடையார்கட்டு பகுதியில் சுகாதார பரிசோதகர்களால் இன்றையதினம் (04) திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வள்ளிபுனம், தேவிபுரம், உடையார்கட்டு பகுதியில் கடைகள் மீது சுகாதார பரிசோதகர்களால் பரிசோதனை நடவடிக்கையுடன் டெங்கு ஒழிப்பு தொடர்பான பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டன.
வண்டு மொய்த்த பொருட்கள்
குறித்த சோதனை நடவடிக்கையில் வண்டு மொய்த்த பொருட்களும் கைப்பற்றப்பட்டதோடு உரிமையாளர்களின் அனுமதியோடு குறித்த பொருட்கள் அழிக்கப்பட்டன.
அத்துடன் டெங்கு தொடர்பான பொலித்தீன் பாவனைக்குட்பட்ட வர்த்தகர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |











விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 3 நாட்கள் முன்

சூப்பர் சிங்கர் போட்டியாளருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் ஆண்டனி... சந்தோஷத்தில் போட்டியாளர், வீடியோ Cineulagam
