வடக்கில் பரவும் எலிக்காய்ச்சல் விலங்குகளிலும் பரவும் அபாயம்
வடக்கு மாகாணத்தில் தற்போது பரவியுள்ள எலிக்காய்ச்சல் நோயானது மனிதர்கள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளிலும் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக வடக்கு மாகாண கால்நடை சுகாதார உற்பத்தி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் வைத்தியர் எஸ்.வசீகரன் தெரிவித்துள்ளார்.
எலிக்காய்ச்சல் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு கால்நடை சுகாதார உற்பத்தி திணைக்களத்தில் இன்று (19) இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பக்ரீரியா உடலுள் ஊடுருவிச் செல்லும்
மேலும் தெரிவிக்கையில், “இந்நோயானது லெப்றரோஸ்பைரா எனப்படும் ஒரு வகை பக்டீரியாவினால் ஏற்படுத்தப்படுகின்ற தொற்று நோயாகும்.
இது பாதிக்கப்பட்ட எலிகளின் சிறுநீரில் இப்பக்டீரியாக்கள் வாழும்.
எலியின் சிறுநீர் மற்றும் மலம் மூலம் வெளியேறும் இப் பக்டீரியாவானது மழை காலங்களில் மழைநீர் மற்றும் வெள்ளத்தில் கலந்து அயற்புறங்களுக்கு பரவும்.
மழை காலங்களில் குடிநீர்க்கிணறுகளில் கூட தொற்றுக்கிருமிகள் கலக்கக்கூடும். தொற்றடைந்த நீரை பருகுவதாலோ அன்றி காயமுற்ற தோல், கண், வாய் போன்ற பகுதிகளில் தொடுகை உறும் வேளைகளில் பக்டீரியா உடலுள் ஊடுருவிச் செல்லும் வாய்ப்புள்ளது.
இதுவே எமது உடலில் எலிக்காய்ச்சல் பரவ பிரதான காரணமாக உள்ளது.
நோய் பரவாது தடுப்பதற்கு..
இதே பக்டீரியாக்கள் நாய், ஆடு, மாடு, பன்றி போன்ற வளர்ப்பு மிருகங்களில் கூட இந்நோயினை ஏற்படுத்திவிடவும் வாய்ப்புக்கள் உண்டு.
இந்த விலங்குகளின் மலம், சிறுநீர் போன்ற கழிவுகளில் நோய்க்கிருமி வெளியேறி இவ்விலங்குகள் வாழும் சூழலில் நெருங்கி பழகும் மனிதனிலும் நோயக்கிருமி பரவி நோய்ப்பாதிப்பை ஏற்படுத்தலாம்.
மனிதனின் குருதியில் நோய்கிருமிகள் உள்ளதை இரத்தப்பரிசோதனைகள் மேற்கொண்டு உறுதிப்படுத்துவதை போலவே வளர்ப்பு விலங்குகளின் குருதி, சிறுநீர் ஆகியவற்றை ஆய்வுகூட பரிசோதனைக்கு உட்படுத்தி நோய்கிருமியின் பிரசன்னத்தை உறுதிப்படுத்த முடியும்.
இந்நோய் பரவாது தடுப்பதற்கு கொதிக்கவைத்த நீர் பருகுதல்,சுகாதாரம் பேணப்படாத உணவு நிலையங்களில் உண்பதை தவிர்த்தல்,செருப்பு அல்லது பூட்ஸ் அணிந்து வெளியில் செல்லல், வெளியே போய் வந்த பின் கை, கால்களை சவர்க்காரம் இட்டு நன்கு கழுவுதல், மழை வெள்ளம் ஏற்படும் காலங்களில் கால்நடைகளை நீர் தேங்கியுள்ள பிரதேசங்களில் கட்டி வைத்தல் மற்றும் மேய்ச்சலுக்கு அனுப்புதல் ஆகியவற்றை தவிர்த்துக்கொள்ளல் அவசியம்.
இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு மனிதரில் தொற்றுக்களை தவிர்ப்பதற்கு விலங்குகளின் கழிவுகள் தேங்கும் பகுதிகளில் உடற்பகுதிகள் நேரடி தொடுகையுறுவதை தவிர்த்தல் அவசியமானது“ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam
