அரசியலமைப்பில் அடிப்படை உரிமையாக சுகாதாரம்: முன்மொழிந்த சஜித்
குடிமை மற்றும் அரசியல் உரிமைகளைப் போலவே சுகாதாரம் மற்றும் சுகாதார வசதிகளையும் அடிப்படை உரிமையாக அரசியலமைப்பில் சேர்க்க வேண்டும் என்று, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்மொழிந்துள்ளார்.
நாடாளுமன்றில், இன்று(06.03.2025) நடைபெற்ற சுகாதார அமைச்சின் குழு நிலை விவாதத்தின் போது, பேசிய அவர், அரசியலமைப்பில் மனித உரிமைகள் பற்றிய ஒரு குறுகிய வரையறை உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது குடிமை மற்றும் அரசியல் உரிமைகளை மட்டுமே கூறுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள்
இந்தநிலையில், இலங்கை சுகாதாரம் மற்றும் சுகாதார வசதிகளை அரசியலமைப்பில் அடிப்படை உரிமைகளாகச் சேர்க்க வேண்டிய நேரம் இது என்றும், அத்தகைய நடவடிக்கையில் எதிர்க்கட்சி அரசாங்கத்தை ஆதரிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, பொருளாதாரம், சமூகம், மதம், கலாசாரம், சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய மனித உரிமைகள் பற்றிய பரந்த வரையறையை வழங்குவதும் முக்கியம் என்று பிரேமதாச கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 16 மணி நேரம் முன்

பிரம்மபுத்திரா நதி இந்தியாவிற்குள் பாய்வதை சீனா நிறுத்த வேண்டும்! பாகிஸ்தான் விடுத்த கோரிக்கை News Lankasri
