1909க்கு பின்னர் கிரிக்கெட்டில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வு
2025, மெல்போர்னில் நேற்று முடிவடைந்த ஏஷஸ் 4 வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி, இரண்டு நாட்களுக்குள் முடிவடைந்தமை குறித்து பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெஸ்டில், இங்கிலாந்து அணி அவுஸ்திரேலியாவை இரண்டு நாட்களில் வீழ்த்தியது. 10 மில்லிமீட்டர் புல் கொண்ட ஆடுகளம் காரணமாக ஆறு கட்டங்களில் 36 விக்கெட்டுகள் வீழ்ந்தப்பட்டன. அதுவும் முதல் நாளில் மட்டும் இருபது விக்கெட்டுகள் வீழ்ந்தது, இது 1909க்குப் பின்னர் ஒரு நாளில் அதிக விக்கட் வீழ்த்தப்பட்ட நிகழ்வாகும்.
10 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் வருமான இழப்பு
இந்த நிலையில், எதிர்பாராத குறித்த முடிவால் தாம் அதிர்ச்சியடைந்ததாக மைதானத்தின் தலைமை க்யூரேட்டர் மெத்யூ பேஜ் தெரிவித்தார்.

அத்துடன், எதிர்காலத்தில் புல் மேம்பாட்டுக்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.
அதேநேரம் இந்த போட்டி முன்கூட்டியே முடிந்ததால் அவுஸ்திரேலியாவுக்கு சுமார் 10 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் வருமான இழப்பு ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, 2011க்குப் பிறகு அவுஸ்திரேலியாவில் இங்கிலாந்தின் முதல் டெஸ்ட் வெற்றி இதுவாகும்.
திருமணம் ஆகாமல் கருவுற்றால் அபராதம்! மணமுடிக்காமல் ஒன்றாக வாழ்ந்தால் 70 டொலர்..எங்கு தெரியுமா? News Lankasri