இன்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ள அருட்தந்தை சிறில் காமினி
அருட்தந்தை சிறில் காமினி (Cyril Gamini) நேற்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சுமார் 7 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியதை தொடர்ந்து இன்றைய தினமும் அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் குறித்து அவர் வெளியிட்ட கருத்து தொடர்பில், அரச புலனாய்வு தலைவர் சுரேஷ் சலே (Suresh Sallay) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடளித்திருந்தார்.
அதற்கமைய, வாக்குமூலம் வழங்குவதற்காக சிறில் காமினி நேற்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
7 மணித்தியாலத்திற்கும் மேலதிகமாக வாக்குமூலம் வழங்கிய பின்னர் அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திலிருந்து வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி.......
ஏழு மணித்தியாலத்திற்கும் மேலதிகமாக வாக்குமூலம் வழங்கிய அருட்தந்தை சிறில் காமினி
