ஏழு மணித்தியாலத்திற்கும் மேலதிகமாக வாக்குமூலம் வழங்கிய அருட்தந்தை சிறில் காமினி
இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விடயத்தில், அரசப் புலனாய்வு பிரிவின் தலைவர் தொடர்பாக வெளியிட்ட சர்ச்சைக்குரிய தகவலை மையப்படுத்தி 7 மணித்தியாலத்திற்கும் மேலதிகமாக வாக்குமூலம் வழங்கிய அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ (Cyril Gamini) குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வெளியேறியுள்ளாா்.
இந்த விடயம் தொடா்பில் ஏற்கனவே தம்மை கைது செய்வதற்கு தடை விதிக்குமாறு கோரி அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ, உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இதன்போது நீதிமன்றத்துக்கு அறிவிப்பு விடுத்திருந்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர், தற்போதைக்கு அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோவை கைது செய்யப் போவதில்லை என்று தெரிவித்திருந்தது.
இதனையடுத்து அவா் இன்று குற்றப்புலனாய்வுத்துறையில் வாக்குமூலத்தை வழங்கினாா்.
அரச புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சாலி மேற்கொண்ட முறைப்பாட்டை அடுத்தே, அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ, வாக்குமூலம் வழங்க அழைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உயிா்த்த ஞாயிறு தாக்குதல்தாரி சஹ்ரானுடன், தமக்கு தொடா்பிருந்ததாக, அருட்தந்தை தொிவித்த தகவல் தொடா்பிலேயே அரசப் புலனாய்வுப்பிாிவின் தலைவா் தமது முறைப்பாட்டை செய்திருந்தாா்.
