ஐ.மக்கள் சக்தியில் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள்!
இரட்டை குடியுரிமை பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இருப்பதாகவும் அவர்கள் சம்பந்தமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கட்சியின் சட்டத்தரணிகளிடம் கேட்டுள்ளதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இரட்டை குடியுரிமை கொண்டுள்ளவர்களின் பெயர்களை வெளியிட முடியாது
அந்த நடவடிக்கை எடுக்கப்படும் வரை ஐக்கிய மக்கள் சக்தியில் இருக்கும் இரட்டை குடியுரிமை பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார் என்ற தகவலை வெளியிட போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
எமது கட்சியில் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் இருக்கின்றனர்.அது சம்பந்தமாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால், அவர்கள் யார் என்பதை வெளியிட முடியாது. நாங்கள் அரசியலமைப்புச்சட்டத்திற்கு அமைய செயற்படுவோம்.
இது சம்பந்தமாக எமது சட்டத்தரணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானம் ஒன்றை எடுப்போம் எனவும் ரஞ்சித் மத்தும பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 22வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்திற்கு அமைய இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட முடியாது என்பதுடன் இலங்கையில் உயர் பதவிகளையும் வகிக்க முடியாது.





அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
