ஹட்டன் குடாகம காட்டுப் பகுதிக்கு அடையாளம் தெரியாதவர்களால் தீ வைப்பு
ஹட்டன் குடாகம காட்டுப்பகுதிக்கு அடையாளம் தெரியாதவர்களால் வைக்கப்பட்ட தீ காரணமாக பல ஏக்கர்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடாகம தொடருந்து கடவைக்கு சமீபமாகவே குறித்த தீ வைப்பு நேற்று(04.02.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
தற்போது நிலவி வரும் வரட்சியான காலநிலையினை தொடர்ந்து இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதனால் தொடருந்து சமிக்ஞைகளும் பாதிக்கப்படலாம் என பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் கோரிக்கை
நீரூற்றுக்கள் காணப்படும் பிரதேசத்தில் குறித்த தீ வைப்பு இடம்பெற்றுள்ளதால் நீரூற்றுக்கள் அற்றுப்போய் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கும் வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.
தற்போது நிலவிவரும் வரட்சியான காலநிலையுடன் கடும் காற்றும் வீசுவதனால் தீ மிக
வேகமாக பரவியதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் வறட்சியான காலங்களில் காடுகளுக்கு தீ வைப்பவர்களை கைது செய்து சட்டத்தின் நிறுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
2600 கோடி வசூல்! வரலாற்று சாதனை ஒரு பக்கம்.. மாபெரும் பின்னடைவு மறுபக்கம்.. 2025ல் தமிழ் சினிமாவுக்கு என்னதான் ஆச்சு Cineulagam
திறப்பு விழாவில் பெரிய பிரச்சனை.. போட்டுக்கொடுத்த ஞானம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
மூத்த குடிமக்களுக்கு சிறந்த ஆஃபர் - ரூ.1,000 முதலீடு செய்தால், மாதம் ரூ.20,500 பெறலாம் News Lankasri