நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் விபத்து : இருவர் வைத்தியசாலையில்
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் பிளக்பூல் சந்தி பகுதியில் இன்று(27) இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை 6 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
ஜீப் ரக வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி சுமார் 25 அடி பள்ளத்தில் பாய்ந்து ஆற்றில் விழுந்துள்ளது.
பொலிஸார் விசாரணை
கினிகத்தேன பகுதியில் இருந்து பதுளை பகுதியை நோக்கி பயணித்த ஜீப் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, குறித்த வாகனத்தில் பயணித்த மூவரில் இருவர் படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கத்தினால் காரணமாக இந்த விபத்து சம்பவித்திருக்கலாம் என தெரிவித்துள்ள நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 20 மணி நேரம் முன்
போரை தொடங்குமா பாகிஸ்தான்? - அமெரிக்கா உடன் ரகசிய ஒப்பந்தம்; பேச்சுவார்த்தையில் வெளிநடப்பு News Lankasri