வனிந்து ஹசரங்க பங்களாதேஷிற்கு எதிரான ரி20 போட்டித் தொடரில் விளையாட மாட்டார்
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க உபாதையினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
உபாதை காரணமாக பங்களாதேஷ் அணிக்கு எதிராக நாளைய தினம் ஆரம்பமாகும் ரி20 போட்டித் தொடரில் வனிந்து ஹசரங்க பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வலது காலில் தசைப்பிடிப்பு உபாதை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியின் போது துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த வேளையில் இந்த உபாதை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, வனிந்து ஹசரங்கவிற்கு பதிலீடாக வேறு வீரர்கள் யாரும் ரி20 குழாமிற்காக பெயரிடப்படவில்லை என ஶ்ரீலங்கா கிரிக்கட் அறிவித்துள்ளது.
பங்களாதேஷ் அணிக்கு எதிராக டெஸ்ட் மற்றும் சர்வதேச ஒருநாள் போட்டித் தொடர்களை இலங்கை கைப்பற்றிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.