கொழும்பு மேயர் ரோசியின் மோசமான செயல்? கடும் குற்றச்சாட்டுக்கள் முன்வைப்பு
உத்தியோகபூர்வ இல்லத்திற்கு 14 குளிரூட்டி சாதனங்களை பொருத்தியமை, வீட்டுக்கு தேவையான பால் மா, வெண்ணை கட்டி, உலர் உணவுகள் மற்றும் தனிப்பட்ட ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்க பொது நிதியை பயன்படுத்தியதாக கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்கவுக்கு (Rosy Senanayakke) எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு வெண்ணை கட்டியை கொள்வனவு செய்வதற்காக மாத்திரம் 68 ஆயிரம் ரூபாயும், சிற்றுண்டிகளுக்காக 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மகிந்த கஹந்தகம, இந்த செலவுகள் தொடர்பான தகவல்களை பெற்று, அது குறித்து இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு(Gotabhaya Rajapaksha) இது குறித்து அறிவித்துள்ளார்.
கோவிட் பரவலுக்கு மத்தியில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் இப்படி பொது நிதியை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என மகிந்த கஹந்தகம(Mahinda Kahandagama) குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri
பிரித்தானியாவில் 181 மில்லியன் பவுண்டுகள் அலைபேசி கொள்ளைச் சம்பவம்: சிக்கிய புகலிடக் கோரிக்கையாளர் News Lankasri
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri