மீள் புனரமைக்கப்பட்ட கல்மடு குளத்தில் நன்னீர் மீன் அறுவடை : அமைச்சர் டக்ளஸால் ஆரம்பித்து வைப்பு
கல்மடு குளத்தில் விடப்பட்ட மீன் குஞ்சுகளின் அறுவடை காலம் நெருங்கியுள்ள நிலையில் அதன் அறுவடை ஆரம்ப நிகழ்வை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devanda) சம்பிரதாய பூர்வமாக நிகழ்த்தி வைத்துள்ளார்.
குறித்த திட்டமானது நேற்று (17.05.2024) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் தேசிய நன்னீர் மீன் உற்பத்தியினை மேம்படுத்துவதுடன் உணவுப் பாதுகாப்பு மற்றும் போசனையை உறுதி செய்யவும் கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தினை வளப்படுத்துவதையும் நோக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படுகின்றது.
அறுவடைக்காலம்
இந்நிலையில், அமைச்சரால் கடந்த ஜனவரி சுமார் ஓரு இலட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டிருந்தன. அத்துடன் நன்னீர் கடற்றொழிலாளர்களின் நலன்கருதி அவர்களது தொழில் நடவடிக்கைகளுக்காக சிறு படகுகளும் அமைச்சரால் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
எனினும், முன்னதாக நாட்டில் நடைபெற்றுவந்த யுத்தம் உக்கிரமடைந்திருந்த 2008ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் திட்டமிட்ட வகையில் உடைக்கப்பட்ட இந்த கல்மடுக் குளமானது டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் நீர்ப்பாசன செழுமைத் திட்டத்திற்கு அமைய உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டில் 800 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்தே குறித்த குளத்தில் நன்னீர் கடற்றொழிலாளர்களின் நலன் கருதி மீன் குஞ்சுகள் விடப்பட்டிருந்துள்ளன.
மேலும், மீன்களின் அறுவடைக்காலம் வந்துள்ள நிலையில் கல்மடு குளத்துக்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் குறித்த நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |