இலங்கையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் காண்டீபனுக்கு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் உயர் விருது

Sri Lanka United States of America
By Benat Nov 08, 2024 08:34 PM GMT
Report

உலகின் முதன்மையான பல்கலைக்கழகமான அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் 2024ஆம் ஆண்டுக்கான  சிறந்த தன்னார்வ தலைமைத்துவ விருதினை இலங்கையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாலேந்திரன் காண்டீபனுக்கு வழங்கியுள்ளது.

சமூக முன்னேற்றத்துக்காக காண்டீபன் ஆற்றிய சேவைக்காகவும் அதற்கான அவரது அர்ப்பணிப்புக்காகவும் இந்த கௌரவத்தை அப்பல்கலைக்கழகம் அளித்துள்ளது.

சம்பள அதிகரிப்பு உறுதி! அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதியின் செய்தி

சம்பள அதிகரிப்பு உறுதி! அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதியின் செய்தி

சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் பல்கலைக்கழகம் 

காண்டீபனுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த விருது இலங்கை மற்றும் ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் புலமைத்துவம் மற்றும் சமூக வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய ஒப்பற்ற பணியையும் பிரதிபலிப்பதுடன், உலகளாவிய ஹார்வர்ட் சமூகத்தில் அவர் ஏற்படுத்திய நேர்மறையான தாக்கத்தையும் வெளிப்படுத்துகின்றது.

1636ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அமெரிக்காவின் தொன்மைச்சிறப்புடைய பல்கலைக்கழகம் ஆகும். அத்துடன், இன்றுவரை உலகின் மிகச்சிறந்த ஆய்வாளர்கள், தலைவர்கள், விற்பன்னர்களை உருவாக்கி அதன் மூலம் சமூகமாற்றத்தை ஏற்படுத்தி வருகின்ற, உலகின் முதன்மைப் பல்கலைக்கழகமாகவும் பல நூற்றாண்டுகளாக திகழ்ந்து வருகின்றது.

இலங்கையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் காண்டீபனுக்கு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் உயர் விருது | Harvard University Honours Kandeban Balendran

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ பழைய மாணவர் சங்கமான ’ Harvard Club of Sri Lanka’ ஆனது, உலகின் 119-ஆவது ஹார்வர்ட் சங்கமாக இலங்கையில் 2021-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன்மூலம் உலகளாவிய ரீதியில் புலமைத்துவம் மற்றும் தொழில்துறை சார் மதிப்பு வாய்ந்த ஹார்வர்ட் வலையமைப்புக்குள் இலங்கையும் இணைந்து கொண்டது.

இந்தநிலையில், இந்த சங்கத்தின் நிறுவுநர் மற்றும் நிர்வாக சபைத்தலைவர் என்ற வகையில், தலைமைத்துவம் - சிறப்புநிலை - சேவை முதலானவற்றின் பெறுமதிகளை முன்னிறுத்திய காண்டீபன், பல புதிய முன்னெடுப்புகளை ஆரம்பித்து வைத்தார்.

இவ்வாண்டில் அவர் தலைமையேற்று நடாத்திய BIG BOLD BRAVE - Harvard ஆசிய பசுபிக் பிராந்திய மாநாட்டில், 15க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பல்துறை விற்பன்னர்கள் பங்கேற்றமை, சர்வதேச தளத்தில் இந்நிகழ்வினைப் பேசுபொருளாக்கியது.

இலங்கை ஹார்வர்ட் சங்க உறுப்பினர்களின் துணையுடன், கோவிட் பெருந்தொற்று காலத்தில், #SaveLivesSriLanka என்னும் சுகாதார முன்னெடுப்பினை பாலேந்திரன் காண்டீபன் ஆரம்பித்திருந்தமை அக்காலப்பகுதியில் பாரிய முக்கியத்துவம் பெற்றது.

இம்முன்னெடுப்பினால் 15 பொதுமருத்துவமனைகளுக்கு அண்ணளவாக 5 கோடி ரூபாய் பெறுமதியான அவசர மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டிருந்தமை, பல உயிர்களைப் பாதுகாக்கவும் நோயாளர்களைக் குணமாக்கவும் காரணமாகியிருந்தது.

தற்போது இலங்கையின் குறிப்பிடத்தக்க வெற்றிகரமான தொழில்முனைவோர்களில் ஒருவராக உள்ள காண்டீபன், தமது ஊடகவாழ்க்கையில் கெப்ப்பிடல் மகாராஜா குழுமத்தில் தலைமை நிறைவேற்று அதிகாரி மற்றும் பணிப்பாளர் பதவிகளை வகித்தமை மட்டுமன்றி, ஊடகத்துறையில் பெரும் சாதனைகளை தனது இளம்வயதிலேயே படைத்திருந்தார்.

குறித்த ஊடகத்தில் தலைமை அதிகாரியாகப் பதவிவகித்த காண்டீபனால், நடாத்தப்பட்ட “மகா இலட்சாதிபதி” நிகழ்ச்சி இலங்கை தமிழ்த்தொலைக்காட்சி வரலாற்றில் மக்களின் பாரிய வரவேற்பைப்பெற்றது.

தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகளாக 250 அங்கங்களையும் தாண்டி ஒளிபரப்பப்பட்ட சிறப்பும் கொண்ட இந்த நிகழ்ச்சியும் அவர் நேர்காணல் செய்து நடத்திய சமூக-அரசியல் நிகழ்ச்சியான ‘மின்னலும்’ பாலேந்திரன் காண்டீபனின் தொடர்பாடல் மற்றும் தலைமைத்துவத்திறன்களை உலகறியச் செய்திருந்தன.

அவரின் தயாரிப்பில் உருவான தனியார் வானொலிகள் இரண்டின் நிகழ்ச்சிகள், இலங்கை ஊடக வரலாற்றில் மக்கள் குரலாக ஒலித்தன. அவை அக்காலத்தில் மிகப்பெரும் சமூகத்தாக்கத்தையும் மாற்றங்களையும் ஏற்படுத்திய நிகழ்ச்சிகளாக இருந்தன.

ஊடகத்துறையிலிருந்து ஒரு தொழில்முனைவோராகவும் கல்வியாளராகவும் தம்மை நிலைநிறுத்திக் கொண்ட காண்டீபன், தமிழ்ப்பண்பாட்டில் பெரிதும் ஈடுபாடு கொண்டவர்.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை அமைப்பதன் மூலம், உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான பீடத்தை ஏற்படுத்த முனைந்த தமிழ் ஆர்வலர்களின் தலைமைக் குழுவின் அங்கத்தவரான காண்டீபன், அந்த முயற்சியில் வெற்றியும் கண்டார்.

உலகின் பல நாடுகளிலும் வாழ்கின்ற தமிழ்பேசும் மக்களை இந்த நோக்கத்திற்காக ஒன்றிணைத்து நிதி திரட்டப்பட்டது. அதன் விளைவாக, இன்று, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்பட்டதுடன், அதன் பேராசிரியராக சங்கத்தமிழ் ஆய்வு வல்லுநர் பேராசிரியர் மார்த்தாவும் நியமிக்கப்பட்டிருக்கின்றார்.

இலங்கையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் காண்டீபனுக்கு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் உயர் விருது | Harvard University Honours Kandeban Balendran

அதுமட்டுமல்லாமல், 400 ஆண்டுகளுக்கு மேலான ஹார்வர்ட் பல்கலைக்கழக வரலாற்றில் முதன்முறையாக, தமிழியல் சார்ந்த கலாநிதிப்பட்ட ஆய்வொன்று தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

2014 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட ‘19 இளம் உலகத்தலைவர்கள்’ பட்டியலில் காண்டீபனின் பெயரும் உள்ளடக்கப்பட்டிருந்து.

அவுஸ்திரேலியாவில் அமைந்துள்ள விக்டோரியா பல்கலைக்கழகம் அவருக்கு ’இளம் சாதனையாளர் விருதையும்’ வழங்கியது. அவுஸ்திரேலியாவின் வர்த்தக மற்றும் முதலீட்டு ஆணைக்குழுவினால் காண்டீபனுக்கு தலைமைத்துவ விருதும் வழங்கப்பட்டிருந்தது.

உலகின் சிறந்த விளம்பர மற்றும் ஊடக உருவாக்கத்தினை வெளிப்படுத்தும் நியூயோர்க் விழாவின், ஆலோசனைக்குழுவில் நியமிக்கப்பட்ட ஒரே இலங்கையராகவும் இவர் கருதப்படுகின்றார்.

கொழும்பு றோயல் கல்லூரியின் பழையமாணவரான காண்டீபன், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் Executive MBA/PLDA பட்டக் கற்கையையும் அவுஸ்திரேலியாவின் விக்டோரியா பல்கலைக்கழகத்தில் MBA பட்டக் கற்கையையும் நிறைவு செய்துள்ளார்.

காண்டீபனால் ஸ்தாபிக்கப்பட்ட அக்கடமிக்ஸ் குழுமம், Miami Ad School, Ivy Future Leader Academy, மொழி அமைப்பு (www.mozhi.com) ஆகியவற்றுடன் EMBRAX Innovations நிறுவனத்தையும் உள்ளடக்கி, சிறப்புற இயங்கி வருகின்றது.

இந்நிலையில், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தினால் காண்டீபனுக்கு வழங்கப்பட்ட இந்த விருது, தமிழ் மக்களை பெருமைப்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாடசாலை மாணவர்களுக்கு நன்மையளிக்கும் திட்டம்! அரசாங்கத்தின் நடவடிக்கை

பாடசாலை மாணவர்களுக்கு நன்மையளிக்கும் திட்டம்! அரசாங்கத்தின் நடவடிக்கை

நாடாளுமன்ற உறுப்புரிமையை இழக்கும் அபாயம்! கடுமையாகும் தேர்தல் விதிமுறைகள்

நாடாளுமன்ற உறுப்புரிமையை இழக்கும் அபாயம்! கடுமையாகும் தேர்தல் விதிமுறைகள்

மரண அறிவித்தல்

வவுனியா, மட்டுவில் தெற்கு, Bobigny, France

15 Nov, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, வவுனியா, Milton Keynes, United Kingdom

17 Nov, 2024
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, Krefeld, Germany

17 Nov, 2024
மரண அறிவித்தல்

பாண்டிருப்பு, முனைத்தீவு

19 Nov, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், சுதுமலை, கொழும்பு, West Drayton, United Kingdom

09 Nov, 2024
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், உசன்

19 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், திருநெல்வேலி, London, United Kingdom

13 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

22 Oct, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, London, United Kingdom

25 Nov, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கனடா, Canada

21 Nov, 2017
45ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மயிலிட்டி, பருத்தித்துறை, உரும்பிராய், வல்வெட்டித்துறை

12 Oct, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், சுவிஸ், Switzerland

21 Nov, 2007
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada

21 Nov, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சரவணை, வவுனியா கூமாங்குளம்

26 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சித்தன்கேணி

13 Dec, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Brampton, Canada

20 Nov, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Harrow, United Kingdom

16 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தர்மகேணி, கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற், Jaffna, கம்பஹா வத்தளை, நல்லூர்

21 Nov, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

20 Nov, 2014
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சங்குவேலி, தாவடி

19 Nov, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி, கரவெட்டி, Melbourne, Australia

16 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், கொழும்பு

11 Dec, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, நெல்லியடி வடக்கு

02 Dec, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கொழும்பு

18 Nov, 2014
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Wembley, United Kingdom

13 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கருகம்பனை, Kingsbury, United Kingdom

18 Nov, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US